திருவாரூர், நவ.2- முன்னாள் முதலமைச் சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சட்டமன்ற நாய கர் கலைஞர் கருத்தரங்கம் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்றது. சட்டமன்ற சபாநாயகர் மு.அப்பாவு தலைமை ஏற்று சிறப்புரை யாற்றினார், மாவட்ட ஆட்சித்தலைவர் தி. சாருஸ்ரீ, அரசு தலைமை கொறடா முனைவர்.கோ.வி. செழியன், திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி. கே.கலைவாணன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர், போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டன. கருத்தரங்கில் மண்டல இணை இயக்குநர் தன்ராஜ், முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜி. பாலசுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கலியபெருமாள், திருவாரூர் நகர்மன்றத்தலை வர் புவனப்பிரியா செந்தில், கல்லூரி முதல்வர் அகிலா மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.