கரூர், டிச.8 - தமிழ் மொழியில் தலைசிறந்த வெற்றி யாளர்களை உருவாக்கும் வகையில், தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் தமிழ்மொழி இலக்கியத் திறனறிதல் தேர்வு நடத்தப் படுகிறது. இதில் வெற்றி பெறுவோ ருக்கு ரூ.36 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும். கடந்த 2022 இல் 46 பேரும், 2023 இல் 103 பேரும் என மொத்தம் 149 பேர் வெற்றி பெற்றனர். வெற்றியா ளர்களுக்கும், இவர்களுக்கு பயிற்சிய ளித்து, கரூருக்கு மாநில அளவில் தொடர்ந்து பெருமை சேர்க்கும் பரணி பள்ளிகளின் முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன் தலை மையிலான ஆசிரியர்களுக்கும் பரணி பார்க் கல்வி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தாளாளர் மோகன ரெங்கன் தலைமை வகித்தார். செய லர் பத்மாவதி மோகனரங்கன், அறங்கா வலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்தனர். தனியார் பள்ளி களின் கரூர் மாவட்டக் கல்வி அலு வலர் செல்வமணி, வெற்றியா ளர்களுக்கும், ஆசிரியர்களுக் கும் பரிசுகள் வழங்கிப் பாராட்டி னார். இத்தேர்வில் வென்ற 149 வெற்றியாளர்களும் தமிழ்நாடு அரசி டம் இருந்து மொத்த ஊக்கத்தொகை யாக ரூ.53,64,000 பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2022 தமிழ்மொழி இலக்கியத் திற னறிதல் தேர்வில் 50 மாணவர்களும், 2023 தேர்வில் 99 பேரும் பரிசுத்தொகை பெற்று கரூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.