கரூர், ஜூலை 28 -
கரூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சம்பந்தமான தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள்ளூர்-வெளியூர் சுற்றுலா வாகன ஏற்பாட்டாளர், பிரதான சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயண, விமான பங்களிப்பாளர், சிறந்த தங்கும் விடுதி, உணவகம், சிறந்த வழிகாட்டி சாகச சுற்றுலா நிகழ்த்தியவர், சுற்றுலா தொடர் பான கூட்டம் மற்றும் மாநாடு அமைப்பாளர்.
சுற்றுலாவில் சமூக ஊடகத்தின் தாக்கத்தை ஏற்படுத்தியவர், தமிழக சிறந்த சுற்றுலா விளம்பரம், சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் விளம்பர கருத்து, சுற்றுலா விருந் தோம்பல், சுற்றுலா தொடர்பான சிறந்த கல்வி நிறுவனம் ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்படுபவர்கள் மற்றும் சிறந்த நிறுவ னங்களை தேர்ந்தெடுத்து உலக சுற்றுலா தின மான 27.9.2023 அன்று விருது வழங்கப்பட உள்ளது.
விருது வழங்கும் விழா நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். கரூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் விருதுக்கான விண்ணப்பங்களை www. tntourismawards.com என்ற இணைய தளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங் களை 15.8.2023 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும், இதுதொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள தொலைபேசி எண். 04324-256257 மற்றும் அலைபேசி எண். 97896 30118 ஆகியவற்றை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் தெரி வித்துள்ளார்.