districts

img

பதவி உயர்வு வழங்கக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

புதுக்கோட்டை, செப்.3 - அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரி புதுக்கோட்டையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது. ஐந்து வருடம் பணி முடித்த குறுமைய பணியாளர்களுக்கும், பத்து வருடம் பணி முத்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற உதவியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட திட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.விஜயலெட்சுமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.தேவமணி, மாவட்டச் செயலாளர் ஏ.சி.செல்வி, பொருளாளர் எஸ்.சவரியம்மாள் உள்ளிட்டோர் பேசினர். கரூர் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் (சிஐடியு) கரூர் மாவட்டக் குழு சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இரவு 10 மணி வரை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.பத்மாவதி தலைமை வகித்தார். சிஐடியு  மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், கரூர் மாநகர மன்ற உறுப்பினர் எம்.தண்டபாணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.எஸ்.அன்பழகன், அங்கன்வாடி சங்க மாவட்டச் செயலாளர் என்.சாந்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.