அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய, மாநில மாநாட்டு தீர்மானங்கள் விளக்கப் பேரவை கூட்டம், நாகை மாவட்டத் தலைவர் கே.சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர் தீர்மானங்களை விளக்கிப் பேசினார். மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எம்.முருகையன், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.மீரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.