புதுக்கோட்டை, பிப்.15- புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் டேக் வாண்டோ தகுதிப்பட்டை தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். நடப்பு ஆண்டுக்கான டேக் வாண்டோ தற்காப்புக் கலையில் மாண வர்களுக்கு டேக்வாண்டோ தேர்வு மற்றும் தகுதிப்பட்டை வழங்கும் விழா புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யா லயா ஓரியண்டல் பள்ளியில் வியாழக் கிழமை நடைபெற்றது. இதில் 350-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் கலந்து கொண்டனர். இதில், ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாண வர்கள் திறமைகளை வெளிப்படுத்தி டேக் வோண்டா தகுதிப்பட்டை மற்றும் சான்றிதழ்களைப் பெற்றனர். பள்ளிக் குப் பெருமை சேர்த்த மாணவர்களை முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி பரிசுகள் வழங்கி பாராட்டினார்.