districts

img

சிலம்பத்தில் சாதனை படைத்த சிறுமிக்கு பாராட்டு

தஞ்சாவூர், மே 31-  

    திருச்சி பொன்மலை விவேகானந்தா நகரை சேர்ந்தவர்கள் ஜகபர்அலி - பர்வீன்  பானு தம்பதி. இவர்கள் மகள் ரிபாயா (12).  இவர் திருச்சி சமது உயர்நிலை பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

     சிலம்பக்கலை ஆசான் கலைச்சுடர் மணி வீ.தங்கராஜ் என்பவரிடம் சிலம்ப பயிற்சி கொடுத்துவருகிறார். இவர் சிலம் பம் சுற்றுவதில் உலக சாதனை படைக்க தொடர் பயிற்சி செய்து வந்தார்.

    இதற்கு முன் 12ஆம் வகுப்பு மாணவி  ஒருவர் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றியதே சாதனையாக இருந்தது.  இதை  முறியடிக்கும் வகையில் 9 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை நிகழ்த்த  முடிவு செய்தார்.

   இதைத் தொடர்ந்து மே 27 அன்று ஆசான்கள் வீ.தங்கராஜ் மற்றும் டிராகன் ஏ.ஜெட்லி முன்னிலையில் 10 மணி 10 நிமி டம் 10 நொடிகள் தொடந்து சிலம்பம் சுற்றி  புதிய உலக சாதனை நிகழ்த்தி ‘ஜெட்லி புக் ஆப் ரெக்கார்டில்’ இடம் பிடித்தார்.  

    மேலும் சாதனை குறித்த ஆவணங்கள்  ‘எவரெஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்டு’ மற்றும்  ‘ஏசியன் பசிபிக் ரெக்கார்டு’ ஆகிய  அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளது.

  இந்நிலையில், தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளு வனை நேரில் சந்தித்து மாணவி ரிபாயா  வாழ்த்துப் பெற்றார். நிகழ்வில், கலைப் புலத் தலைவர் முனைவர் பெ.இளை யாப்பிள்ளை, முனைவர் ஞா.பழனிவேலு, சிலம்பாட்ட பயிற்றுனர் வீ.தங்கராஜ் மற்றும்  சாதனை சிறுமியின் பெற்றோர்கள் உடனி ருந்தனர்.

;