districts

img

டெல்டாவில் பெரும் எழுச்சி சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி

திருச்சிராப்பள்ளி, அக்.11 - தமிழகத்தின் அமைதியை பாதுகாப்போம்,  மதவாத சக்திகளை முறியடிப்போம் என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சி கள், காங்கிரஸ், மதிமுக, திராவிடர் கழகம், விடு தலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட 9 கட்சிகள் மற்றும் ஆதரவு பல்வேறு அமைப்புகள் தமிழ கம் முழுவதும் செவ்வாய்க்கிழமை சமூக நல் லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் வலியுறுத்தி மாபெரும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கத்தை நடத்தின. திருச்சி தலைமை தபால் நிலையம் அரு கில் நடந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். சிபிஎம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, மாநகர் மாவட்ட செய லாளர் ராஜா உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். லால்குடியில் நடை பெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு சிபிஎம்  புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலை யத்திலிருந்து ரயிலடியைத் தாண்டி சுமார் 4 கி.மீட்டர் தூரத்திற்கு அனைத்து கட்சியினர் மனித சங்கிலியாக அணிவகுத்து நின்றனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்  குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன், சிபிஐ தஞ்சை தெற்கு  மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, விடு தலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா ளர் சொக்கா ரவி, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அமர்சிங், காங்கிரஸ் மாநகரச் செயலா ளர் பி.ஜி. ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் பெரி யார் சிலையில் இருந்து, தலைமை தபால் நிலை யம் அம்பேத்கர் சிலை வரை சுமார் 2 கி.மீட்டர்  தூரத்திற்கு ஆயிரக்கணக்கானோர் மனிதச் சங்கிலியாக அணிவகுத்து நின்றனர். பேரா வூரணி பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலையி லிருந்து அணிவகுத்து நின்றனர்.
கும்பகோணம்
கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோயில்  முதல் மற்றும் செட்டிமண்டபம் வரை 5 கி.மீட்டர்  வரை மனிதச் சங்கிலி நடைபெற்றது. இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன், மாநகர செயலாளர் செந்தில் குமார், கும்பகோணம் மாநகர மேயர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 மையங் களில் பல்லாயிரக்கணக்கானோரின் பங்கேற்பு டன் நடைபெற்ற மனித சங்கிலியில், காங்கிரஸ்  கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.திருநா வுக்கரசர், மாவட்டத் தலைவர் வி.முருகேசன், மதிமுக மாவட்டப் பொருளாளர் எஸ்.கே. கலியமூர்த்தி, சிபிஐ மாவட்டச் செயலாளர் த. செங்கோடன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எஸ்.சங்கர், உட்பட பலர் பங்கேற்ற னர். அறந்தாங்கில் நடைபெற்ற மனித சங்கிலி யில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், கந்தர்வகோட்டையில் சிபிஎம் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், கறம்பக் குடியில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் த.அன்பழகன், ஆலங்குடியில் விசிக மாவட்டச் செயலாளர் சசி.பா.கலைவேந்தன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர் உள்ளிட் டோர் பங்கேற்றனர். கீரனூரில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன், அன்னவாசலில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. சண்முகம், மணமேல்குடியில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், பொன்னமராவதியில் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் துரை.நாராயணன், திருமயத் தில் முன்னாள் எம்எல்ஏ ராம.சுப்புராம், சிபிஎம்  சார்பில் ஜீவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.
கரூர்
கரூர் பேருந்து நிலையம் காமராஜர் சிலை யிலிருந்து வட்டாட்சியர் அலுவலகம், ஜவகர் பஜாரில் ஒரு கி.மீட்டர் தொலைவிற்கு மனித  சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத் திற்கு விசிக மேற்கு மாவட்ட செயலாளர் ஜெய ராமன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள பொது அலுவலக சாலையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை சிபிஎம் நாகை மாவட்ட செயலாளர் வி. மாரி முத்து ஒருங்கிணைத்தார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பி னருமான வி.பி.நாகைமாலி துவக்கி வைத்தார்.  விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்டச் செய லாளர் ப.கதிர்நிலவன் நன்றி கூறினார்.

;