districts

img

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13.36 லட்சம் வாக்காளர்கள்

புதுக்கோட்டை, ஜன.22-  2024-ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 13,36,605 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர கத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2024-இன் இறுதி வாக்காளர் பட்டியலினை, புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதி கள் முன்னிலையில் திங்கள்கிழமை வெளியிட்டார்.  பின்னர் ஆட்சியர் தெரிவித்த தாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,60,574 ஆண் வாக்காளர்கள்,  6,75,969 பெண் வாக்காளர்கள் மற்றும் 62 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 13,36,605 வாக்காளர்கள் 2024-ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 2024-ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலில் (27.10.2023- இன் படி) மொத்தம் 13,15,798 வாக்கா ளர்கள் இடம் பெற்றிருந்தனர். 27.10.2023 முதல் 09.12.2023 வரை நடை பெற்ற 2024-ஆம் ஆண்டிற்கான சிறப்பு முறை சுருக்கத் திருத்தத்தின்போது 13,809 ஆண் வாக்காளர்கள், 17,552 பெண் வாக்காளர்கள் மற்றும் 03 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 31,364 வாக்காளர்கள்; புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,559 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில்; நகர எல்கைக்குள் 83 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்கைக்குள் 864 வாக்குச்சாவடி அமைவிடங்கள் என மொத்தம் 947 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன. 2024-ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் 18-19 வயதுடைய 21,142  இளம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் என புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி,  வருவாய் கோட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.