சிபிஎம், வாலிபர் சங்கம் வலியுறுத்தல்
மயிலாடுதுறை, ஏப்.23 -
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராடி பெற்ற தொழிலாளர் உரிமைச் சட்டத்தை பறிக்கும் 12 மணி நேர வேலை சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத் தியும், தொழிலாளர்களின் உரிமையை பறிக்காதே என்ற முழக்கமிட்டும் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமை வகித்தார்.
கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டா லின், எஸ்.துரைராஜ், டி.சிம்சன், ஏ.ரவிச் சந்திரன், ஜி.வெண்ணிலா, சி.விஜய காந்த், ஒன்றிய செயலாளர்கள் டி.ஜி.ரவி, அசோகன், மயிலாடுதுறை நகர பொறுப்பு செயலாளர் ஏ.ஆர்.விஜய் மற்றும் மாவட்டக் குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை
12 மணிநேரம் என வேலை நேரத்தை மாற்றி தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தொழிற்சாலைகள் சட்ட திருத்தத்தைக் கண்டித்தும், உடனடியாக அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக் கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை பேருந்து நிலையத் தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பி னர் பி.அருண் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் எம்.மகாதீர், துணைச் செய லாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பாண்டி, கெளதம், தினேஷ், தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வாலிபர்கள் பங்கேற்றனர்.