districts

img

கார்நேசன் அரசு மருத்துவமனையில் முடங்கிக் கிடக்கும் 108 ஆம்புலன்ஸ்

கும்பகோணம், மார்ச் 28- சாலையில் அலறும் ஆம்பு லன்ஸின் அலெர்ட் ஒலியைக் கேட்டால்... வண்டிகள் சட்டென  ஒதுங்கி வழிவிடும். ‘யாருக்கு... என்ன நடந்ததோ?’ என்ற கவலை யும், பதட்டமும் பயணிப்பவர்களை யும் தொற்றிக் கொள்ளும். விலை மதிப்பில்லாத உயிரைக் காக்க ஜெட்  வேகத்தில் பறக்கும் ஆம்புலன்ஸின்  செயல்பாடுகள் குறித்த விவரத்தை அறிய, 108-க்கு போன் செய்தால் ஆம்புலன்சையும் காணோம், ஆளையும் காணோம் என கும்பகோ ணம் மக்கள் வருத்தம் தெரிவிக் கின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணத்தில் உள்ள கார்நேசன் மருத்துவமனை மிகவும் பழமையா னது. இது ஆரம்ப சுகாதார மைய மாக, கும்பகோணத்தின் மையப் பகுதியில் இருப்பதால் வெளி நோயாளிகள், கர்ப்பிணிகள் என  ஏராளமானோர் வந்து செல்கின்ற னர். அவசர காலத்தில் விபத்துக்கு  உள்ளானோர் மற்றும் கர்ப்பிணி களை அழைத்து வருவதற்காக மருத் துவமனையில் ஆம்புலன்ஸ் சேவை  தொடங்கப்பட்டது. ஆனால், எவ்வித முன்னறி விப்புமின்றி ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டு நீண்ட நாட்களாக மருத்துவமனை வளாகத்திலேயே நின்று கொண்டிருக்கிறது என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உள்புற, வெளிப்புற நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். அவசரச்  சிகிச்சைக்கு உதவிக்கு அழைத் தால் வரும் ஆம்புலன்ஸ், மருத்துவ மனை வளாகத்திலேயே பயன் பாட்டில் இல்லாமல் கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.  இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பலமுறை புகார்  அளித்தும் எந்தவொரு நடவடிக்கை யும் எடுக்கவில்லை. மாநகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் செயல் படுகிறதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

;