districts

img

அக்னி பாதைக்கு எதிர்ப்பு: சிபிஎம் போராட்டம்

திண்டுக்கல்/சிவகங்கை, ஜூன் 20- அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பிர பாகரன். மாவட்டக்குழு உறுப்பினர் பெருமாள். ஒன்றியச் செயலாளர் வெள்ளைக் கண்ணன், சரவண கோபால் பாப்பாத்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சிவகாசி
சிவகாசி பேருந்து நிலையம் முன்பு  சிஐடியு கன்வீனர் இ.பழனி தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா மாவட்ட உதவித் தலைவர் எம்.சாராள், கே.முருகன், இரா.சுரேஷ்குமார், வி.என்.ஜோதிமணி, வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் பி.கணேசன், விதொச மாவட்டச் செயலாளர் எம்.சுந்தரபாண்டியன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ஜெயபாரத் உட்பட பலர் பங்கேற்றனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் சிவ கங்கை, பூவந்தி, காரைக்குடி, இளை யான்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

;