திண்டுக்கல் சுரபி நர்சிங் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் அமமுக கட்சி பிரமுகரும் கல்லூரியின் தாளாளருமான ஜோதி முருகனுக்கு 7 ஆண்டுசிறைத்தண்டனையும் விடுதிக்காப்பாளர் அர்ச்சனாவிற்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் பழனி சாலையில் முத்தனம்பட்டி அருகேயுள்ளது சுரபி நர்சிங் கல்லூரி. இக்கல்லூரி யின் தாளாளர் ஜோதிமுருகன். இவர் இக்கல்லூரியில் பயிலும் மாணவியர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந் துள்ளார். இது தொடர்பாக இக்கல் லூரியின் மாணவியர்கள் இவர் மீதும், இக்கல்லூரியின் விடுதி காப்பாளர் அர்ச்சனா மீதும் குற்றம் சாட்டி நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 2021 ஆம் ஆண்டு திண்டுக் கல் பழனி புறவழிச்சாலையில் மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜாமீனை எதிர்த்துப் போராட்டம்
இதனையடுத்து தாளாளர் ஜோதி முருகன் தலைமறைவானார். மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் தாளாளர் ஜோதிமுருகன் மற் றும் விடுதி காப்பாளர் ஆகியோர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவு களின் கீழ் தாடிக்கொம்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். திண்டுக் கல் சரக டி.ஐ.ஜி. உத்தரவின் பேரில் தாளாளர் ஜோதி முருகனை பிடிக்க போலீசார் 5 தனிப்படை குழுக்கள் அமைத்து தேடிவந்தனர். இந்நிலை யில் ஜோதிமுருகன் திருவண்ணா மலை நீதிமன்றத்தில் சரணடைந் தார். இந்நிலையில் திண்டுக்கல் மகிளா நீதிமன்ற நீதிபதி புருசோத்த மன், தாளாளர் ஜோதிமுருகனுக்கு ஜாமீன் வழங்கி வடமதுரை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
திண்டுக்கல் மகிளா நீதிமன்றத் தின் உத்தரவை எதிர்த்து அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக போராட்டம் நடந்தது.
ஜோதிமுருகன் உடல்நிலை பிரச்சனையை காரணம் காட்டி கை யெழுத்திட செல்லவில்லை. இந் நிலையில் மகிளா நீதிமன்றத்தில் கையெழுத்து போட உத்தரவிடப் பட்டது. இந்நிலையில் ஜோதிமுருக னுக்கு ஜாமீன் வழங்கியதை எதி ர்த்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக அன்றைய மாநில பொதுச்செயலாளர் பி. சுகந்தி வழக்கறிஞர் உ.நிர்மலா ராணி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் முறையீடு செய்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
மனுவை விசாரித்த நீதிபதி கள், ஜோதிமுருகன் ஜாமீன் மனு வை ரத்து செய்து, குண்டர் சட்டத் தில் அவரை கைது செய்ய உத்தர விட்டனர். இதனையடுத்து ஜோதி முருகன் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மேல் முறையீடு மனுவை விசாரித்த நீதி பதிகள், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை உறுதி செய்து ஜோதிமுருகன் ஜாமீன் மனுவை ரத்து செய்தனர். இதனையடுத்து ஜோதிமுருகன் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற போக்சோ வழக்கில் திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் செவ்வா யன்று தீர்ப்பளித்தது.
விடுதிக்காப்பாளருக்கு 5 ஆண்டு சிறை
நீதிபதி கருணாநிதி அளித்த தீர்ப்பில், பாலியல் குற்றத்தில் சுரபி கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் ஈடுபட்டதை உறுதி செய்து 7 ஆண்டு சிறையும், ரூ.75 ஆயிரம் அபராத மும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த குற்றத்திற்கு உடந் தையாக இருந்த விடுதிக்காப்பா ளர் அர்ச்சனாவிற்கு 5 ஆண்டு சிறை யும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
தாளாளர் ஜோதிமுருகன் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத் தின் அம்மா பேரவை மாநில இணைச் செயலாளராகவும், வெள் ளாளர் சங்கத்தின் மாநில தலை வராகவும் செயலாற்றியவர். திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகு தியில் போட்டியிட்டு தோல்வியுற்ற வர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாதர் சங்கம் வரவேற்பு
இத்தீர்ப்பினை அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்க திண்டுக் கல் மாவட்டக் குழு வரவேற்றுள்ளது.