districts

img

தொப்பூர் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் வழக்கை திசைதிருப்பும் காவல்துறை – சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூன் 13- தலித் இளைஞர்கள் மீது திட்ட மிட்டு நடைபெற்ற தாக்குதலை விபத்து என மடைமாற்றும் காவல் துறையை கண்டித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கடந்த மே 28 ஆம் தேதியன்று, தருமபுரி மாவட்டம், தொப்பூர் செக்போஸ்ட் அருகில், மூன்று தலித் இளைஞர்கள் மீது தாக்கு தல் நடைபெற்றது. இந்த தாக்கு தலில் இளைஞர் ஜீவா என்பவரின் கால் துண்டிக்கப்பட்டு நீண்ட தொலைவில் உள்ள முள்புதரில் வீசப்பட்டது. தலித் இளைஞர்கள் மீது திட்டமிட்டு நடைபெற்ற இந்த கொலைவெறி தாக்குதலை விபத்து என கூறி தொப்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல்துறையினரின் திசை திருப்பல் நடவடிக்கையை கண் டித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  தருமபுரி சிபிஎம் மாவட்ட செய லாளர் ஏ.குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் கண்டன உரையாற் றினார். இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, ஆர்.சிசுபாலன், எஸ்.கிரைஸாமேரி, சோ.அருச்சுணன், வே.விசுவநாதன், ஆர்.சின்ன சாமி, ஆர்.மல்லிகா, தருமபுரி நகர செயலாளர் ஆர்.ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர்கள் தருமபுரி என்.கந்தசாமி, நல்லம்பள்ளி எஸ். எஸ்.சின்னராஜ், அரூர் பி.குமார், பாப்பிரெட்பட்டி தனுசன், கண் ணூர் சிவப்பிரகாசம், ஏரியூர் பி. என்.முருகன் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர். 

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் பேசுகையில், 
தொப்பூர் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில், காவல் துறை முழுமையாக விசாரிக்கா மல் சம்பவத்தை மூடிமறைக்க விபத்து என வழக்கு பதிந்துள்ளது. தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் திட்டமிட்ட சம்பவம். இந்த வழக்கை சிபிசிஐடி விசார ணைக்கு மாற்ற தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலை, நிவாரணம் வழங்க வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடு பட்ட குற்றவாளிகள் மீது வன்கொ டுமை சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்யவேண்டும். தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்ப வத்திற்கு ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுக்கி றது. காவல்துறை ஜனநாயக முறையில் போராடும் உரிமையை மறுக்கிறது. ஜனநாயக உரிமை களை மறுப்பதற்கு காவல் துறைக்கு அதிகாரம் இருக்கி றதா?. முதலில் வாகனத்தை இளைஞர்கள் மீது இடித்தனர். பின்பு அங்கு வந்தவர்கள் ஜீவா வின் காலை வெட்டினார்கள் என்று தாக்கப்பட்ட இளைஞர் ஜீவா வின் தந்தை வாக்குமூலத்தில் கூறி யிருக்கிறார். இருப்பினும் காவல் துறை மூடிமறைக்கிறது. இந்த பிரச்சனையில் சாதிய வன்மம் உள்ளது. ஆகையால் மார்க்சிஸ்ட் கட்சி நீதி கேட்டு போராடுகிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை மார்க்சிஸ்ட் கட்சி போராடும் என்றனர்.  முன்னதாக, ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, கோரிக்கை மனுவை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் சமூக நலபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காந்தியிடம் அளித்தனர்.

;