districts

மகளிர் சுய உதவிக் குழு தொழில் துவங்க ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு மானியத்துடன் கடன் வழங்கல்

தஞ்சாவூர், பிப்.21 - தாட்கோ மூலமாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர்களுக்கு பல்வேறு பொருளாதார மேம்பாட்டு  திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது. பொருளா தார மேம்பாட்டிற்கான திட்டங்களின் கீழ் மகளிருக் கான சுய உதவி குழுக்கள் தொழில் துவங்குவதற்கு 50 விழுக்காடு, அதாவது ரூ.2. 50 ஆயிரம் மானிய தொகை யும், மீதி தொகை வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்படும். மேலும், ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மகளி ருக்கு நிலம் வாங்குவதற்கு வங்கியுடன் இணைந்து மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டு வருகிறது. நிலம் வாங்கும் திட்டத்தில் விண்ணப்பதாரர், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமலும், வயது  18-ல் இருந்து 65-க்குள்ளும் இருக்க வேண்டும்.  நிலம் வாங்கும் திட்டத் தில் அதிகபட்சமாக ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவரிடம் இருந்து  நிலம் வாங்க வேண்டும். இத் திட்டத்தில் பத்திரப்பதிவு கட்டணத்தை அரசு தள்ளு படி செய்துள்ளது. நிலம் வாங்கும் அரசு மதிப்பீட்டு தொகையில் 30 விழுக்காடு அதிகப்பட்சமாக, அதாவது ரூ.2.25 ஆயிரம் மானிய தொகையும், மீதி தொகை வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்படும். நில மேம்பாட்டு திட்ட த்தில் ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியின விவசாயி களுக்கு நில வளத்தை மேம்ப டுத்துதல், ஆழ்குழாய் கிணறு அல்லது திறந்தவெளி கிணறு அமைத்தல் போன்றவற்றிற்காக 30 விழுக் காடு அதாவது, ரூ.2.25 ஆயி ரம் மானிய தொகையும், மீதி  தொகை வங்கி மூலம் கடனா கவும் வழங்கப்படும்.

மருத்துவர் பட்டம் பெற்று  இந்தியன் மெடிக்கல் கவுன்சி லில் பதிவு செய்தவர்கள் சொந்தமாக மருத்துவமனை அமைப்பதற்கும், மருத்து வம் சார்ந்த படிப்புகள் படித்த  இளைஞர்களுக்கு முடநீக்கு மையம் மருந்தகம் (பிசியோ தெரபி மையம்), மருந்தகம் (பார்மஸி), இரத்த பரிசோ தனை நிலையம் (கிளினிக்கல்  லேபரட்டரி) மற்றும் கண்  கண்ணாடியகம் (ஆப்டிக் கல்) அமைப்பதற்கு 30 விழுக் காடு அதாவது ரூ.2.25 ஆயி ரம் மானியத் தொகையும் மீதி  தொகை வங்கி மூலம் கட னாகவும் வழங்கப்படும். கடன் வேண்டி விண்ணப் பிப்பவர்கள்  http://applica tion.tahdco.com என்ற இணையதள முகவரியில் உரிய சான்றுகளுடன் விண் ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  மேலும் விபரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக வளாகத் தில் உள்ள தாட்கோ மேலா ளரை அணுகலாம். தொடர் புக்கு-04362-256679 என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரி வித்தார்.