பாபநாசம், மார்ச் 20- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த இராஜ கிரி அன்னை கதீஜா ரலி கல்வி மையம், ஹனபி பெரிய பள்ளி பரிபாலன சபை இணைந்து முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நடுக்கடை பிளாக் துலிப் அதிபர் முகம் மது யஹ்யா தலைமை வகித்தார். பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா மாணவ, மாணவியர்களுக்கு சான்றி தழ்களை வழங்கினார். பெரிய பள்ளி தலைவர் யூசுப் அலி வரவேற்றார். செயலர் முகம்மது சுல்தான், முதல் வர் முகம்மது இஸ்மாயில் ஹஜ்ரத், முத்தவல்லி ரவூப், துணைச் செயலர் சபீர் அக மது, கல்வி மைய தலைவர் முபா பாரூக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.