districts

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் மானியம்

தஞ்சாவூர், செப்.15- விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும், நிலையான வருமானம் கிடைத்திட வழிவகுத்திடவும் தமிழக அரசு, தேசிய வேளாண்  வளர்ச்சி திட்டத்தின் கீழ்,  ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும்  விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது.  இத்திட்டத்தின் கீழ், பயனாளியாக சேர இருக்கும் விவசாயிகளுக்கு குறைந் தது ஒரு ஹெக்டேர் நஞ்சை நிலம் அவரது பெயரில் இருக்க வேண்டும். ஆடு மாடு,  கோழி, ஏதும் இல்லாதவராக இருக்க  வேண்டும். நெல் சாகுபடி செய்ய வேண் டும். தேனீப்பெட்டி, பழமரக்கன்றுகள் மானிய விலையில் விநியோகம் செய்யப் படும். மண்புழு உரத் தொட்டி அமைத்து தரப்படும். இத்திட்டத்தில் சேர விரும்புவோர் 2022-23 ஆம் ஆண்டில், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட திருச்  சிற்றம்பலம், வலப்பிரமன்காடு, பின்ன வாசல், கல்லூரணிக்காடு,  தென்னங்குடி, அலிவலம் மற்றும் புனல்வாசல் ஊராட்சி களை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்  டும். இந்த ஊராட்சிகளிலிருந்து 80 சத வீதம் நபர்களும், மீதமுள்ள ஊராட்சிகளிலி ருந்து 20 சதவீதம் நபர்களும் தேர்வு செய்  யப்படுவர்.  தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாட்டுக்கொட்டகை மற்றும் எருக்குழி அவசியம் இருத்தல் வேண்டும். விண் ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா. அடங்கல், ஆதார் எண் ஆகியவற்று டன் பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அல்லது  அவரவர் தொகுதி வேளாண்மை உதவி அலுவலர்களை அணுகி விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற வுடன் நேரில் களஆய்வு செய்து தகுதி யான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்  படும் என பேராவூரணி வட்டார வேளா ண்மை உதவி இயக்குநர் (பொ) ராணி தெரி வித்துள்ளார்.

;