districts

தஞ்சை: வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

தஞ்சாவூர், செப்.7 -  தஞ்சாவூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் நிலையில் உள்ள வருவாய்த்துறை அதிகாரி களை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ்  ஆலிவர் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருவிடைமருதூர் வட்டாட் சியர் எஸ்.சந்தனவேல் கும்பகோணம் முத்தி ரைத்தாள் கட்டண தனி வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றிய எஸ்.திருமால் பட்டுக் கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றிய டி.பி.சுசிலா திருவிடைமருதூர் வட்டாட்சிய ராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பேராவூரணி சமூக பாதுகாப்புத் திட்ட தனி  வட்டாட்சியர் எஸ்.தரணிகா, பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராகவும், அங்கு பணியாற்றிய எல்.பாஸ்கரன் பேராவூரணி சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட் சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர். திருவை யாறு ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர்  வி.பூங்கொடி, பாபநாசம் வட்டாட்சியராக வும், அங்கு பணியாற்றிய டி.மதுசூதனன் கும்பகோணம் வட்ட வழங்கல் அலுவலராக வும், அங்கு பணியாற்றிய ஜி.பெர்சியா பூதலூர் வட்டாட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மாவட்ட ஆட்சியர்  அலுவலக (நிலம்) தனி வட்டாட்சியர் டி.நெடுஞ் செழியன், திருவையாறு ஆதி திராவிட தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

;