districts

தஞ்சாவூர் ,மன்னார்குடி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை , அரியலூர் முக்கிய செய்திகள்

பழவதங்கட்டளை ஊராட்சிக்கு சொந்தமான பூங்காவில் 15 தேக்கு மரங்கள் வெட்டிக் கடத்தல்
கும்பகோணம் ஜன.9 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பழவ தங்கட்டளை ஊராட்சியில் அமைந்துள்ள பிரசாந்தி நகர்  மனைப்பிரிவில் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள, சாய்ராம் பூங்காவில் 40 தேக்கு மரங்கள் பயிர் செய்து பராமரிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூங்காவில்  இருந்து 15 தேக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி உள்ளனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தேக்கு மரங்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் பழவ தங்கட்டளை ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், கும்பகோ ணம் ஒன்றிய அலுவலகத்திலும் புகார் தெரிவித்துள்ளனர்.  

அதன்பேரில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலை வர் காயத்ரி அசோக்குமார், சாய்ராம் பூங்காவிற்கு சென்று பார்வையிட்ட பின், மரங்களை வெட்டிக் கடத்தியுள்ளதை உறுதி செய்தார். பின்னர் அருணா ஜெகதீசன் கார்டனில் உள்ள  வனச்சரக அலுவலகத்தில் ஆய்வாளரிடம் ஊராட்சிக்கு சொந்தமான தேக்கு மரங்களை வெட்டி திருடியவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுத்து மேற்படி திருட்டு  போன தேக்கு மரங்களை மீட்டு பொதுமக்கள் முன்னிலையில்  ஏலத்தில் விட வேண்டும். தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்டதை வனச்சரக அலுவலர்களுக்கும், மேல் அதிகாரிகளுக்கும் தகவல் தெரி விக்காத ஊராட்சி செயலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தார்.

நுரையீரல் நோய்களுக்கு இலவச பரிசோதனை
மன்னார்குடி, ஜன. 9 - தமிழகத்தில் முதன்முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வழிகாட்டுதலில் ‘மின்னும் மன்னை’ திட்டத்தின் கீழ் நுரை யீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான இலவச பரிசோதனை முகாம் மன்னார்குடி ஒன்றியம் எடையர், எம்பேத்தி கிராமத்தில்  நடைபெற்றது.  மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா முயற்சி யில், நுரையீரல் இழைநார் பெருக்கம், காசநோய், நுரையீ ரல் புற்றுநோய், நுரையீரல் சவ்விடை வளிமத்தேக்கம் போன்ற  நோய்களுக்கான இந்த இலவச சோதனை முகாம் எடையர்  எம்பேத்தி கிராம நூலகத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், இப்பரிசோதனை முகாம்  இந்த சமயத்தில் மிகவும் அவசியமானது. எங்கள் கிராமத்தைச்  சேர்ந்த 220 பேர் நுரையீரல் பரிசோதனை செய்து பயன் பெற்ற னர் என்றார்.

கலந்தாய்வு கூட்டம்
பொன்னமராவதி, ஜன.9 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள சொர்ண மஹாலில் தமிழ்நாடு டெண்ட் டீலர்கள் மற்றும் டெக்க ரேட்டர் நலச் சங்கத்தின் மாநில-மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு  கூட்டம் மாவட்ட சேர்மன் பால்ராஜ் தலைமையில் நடைபெற் றது. இதில் மாவட்ட தலைவர் அம்புரோஸ், மாவட்ட செயலா ளர் தரணி முத்துக்குமார், மாவட்ட துணைத் தலைவர் ராஜ மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சேர்மன்  பொன்ராஜ், மாநிலத் தலைவர் பிரவீன்தாஸ், மாநில செயலாளர் வேலுசாமி, மாநில பொருளாளர் வெங்கடேஷ்பாபு ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட இணைச் செயலாளர்  ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

செம்பனார்கோவில் 82 மையங்களில் தடுப்பூசி முகாம் 
மயிலாடுதுறை, ஜன.8 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத் தில் சனிக்கிழமை 82 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தரங்கம்பாடி புனித தெரசா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற முகாமை பூம்புகார் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் துவக்கி வைத்தார்.  வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார் தலை மையில் நடந்த முகாமில் செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினிஸ்ரீதர், கல்லூரி தாளாளர் கருணா ஜோசப்பாத், சுகாதார  மேற்பார்வையாளர் ஜெயக்குமார், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் அரசு உதவ குடும்பத்தினர் வேண்டுகோள்
பொன்னமராவதி, ஜன. 9 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள  உசிலம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன் (37). இவருக்கு இளஞ்சியம் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சவூதி அரேபியாவில் ஓட்டுநராக பணிபுரிந்த ஆனந்தன், கடந்த நவ.7 ஆம் தேதி அங்கு நிகழ்ந்த சாலை  விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவ வேண்டி, தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அவரது  குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தற்போது தமிழக அரசின்  முயற்சியால் சொந்த ஊரான எம்.உசிலம்பட்டி கிராமத்திற்கு  அவரது உடல் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.  இரண்டு சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும்  வறுமையில் வாழும் ஆனந்தனின் மனைவி மற்றும் குழந்தை களுக்கு தமிழக அரசு கருணையின் அடிப்படையில் உதவ  வேண்டுமென அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி
அரியலூர், ஜன. 9 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்சவள்ளி(70). அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சமையல் வேலை பார்த்து  ஓய்வு பெற்றவர். இவரது வீடு கட்டும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை மாடியில் புதி தாக கட்டப்பட்ட சுவற்றுக்கு அம்சவல்லி தண்ணீர் தெளித்து  கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின்  கம்பி உரசியதில் அம்சவள்ளி தூக்கி வீசப்பட்டு கம்பிகளுக் கிடையே சிக்கி உயிரிழந்தார்.  தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் காவல்துறையி னர் அம்சவள்ளியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்கறிஞர் சங்க தேர்வு 
அறந்தாங்கி, ஜன.9 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வழக்கறிஞர்  சங்க தேர்வு அக்ரஹாரம் வர்த்தக சங்க மஹாலில் நடை பெற்றது. வழக்கறிஞர்கள் கே.ராம்குமார், அருண்ராஜ் தேர்தல்  பொறுப்பாளர்களாக செயல்பட்டனர். இதில் வழக்கறிஞர் ஆ. கார்த்திகேயன் தலைவராக தேர்வுபெற்றார். செயலாள ராக கணேஷ்ராஜன், பொருளாளராக காயத்திரி, துணை தலை வராக முத்துவிஜயன், இணை செயலாளராக கே.எம்.எஸ்.செந்தில்குமார் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;