districts

கோயில் இடத்தோடு பட்டா இடமும் அகற்றம் பொதுமக்கள் மறியல்

கும்பகோணம், நவ.10- கும்பகோணம் அருகே தாராசுரத்தில் சாலைக்காரத்தெரு, அரசலாற்றங்கரை யோரம் இந்து சமய அறநிலையத் துறைக்  குட்பட்ட மல்லு கச்செட்டித்தெரு சந்தான  கோபாலகிருஷ்ண சுவாமி கோயிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் 26 சென்ட் நிலம் பல ரால், வேலி அமைத்து ஆக்கிரமித்துள ளதை தொடர்ந்து அதனை அறநிலை யத்துறை சார்பில் அகற்றி மீட்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கும்பகோணம் அருகே தாராசுரத்தில் சாலைக்காரத்தெருவில் சந்தானகோபாலகிருஷ்ண  சுவாமி கோயி லுக்கு சொந்தமான இடத்தை இந்து சமய அறநிலையத்துறையினர் முள் வேலிகள் அதிரடியாக அகற்றி, அந்த இடத்தை அற  நிலையத்துறை மீட்டெடுத்தது. அப்போது அந்தப் பகுதியில் குடி யிருந்த மக்கள் நாங்கள் காலகாலமாக இருக்கும் இடத்தில் எங்களிடம் முன் அறி விப்பும் இல்லாமல் எந்தவித நீதிமன்ற உத்தரவும் இன்றி, இப்படி அதிரடியாக அனுமதிக்க மாட்டோம் இப்படி அறநிலை யத்துறை நாங்கள் இருக்கும் இடத்தை இடித்து தள்ளுகிறது எங்களிடம் இருப்பி டத்திற்கான பட்டா உள்ளது என தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் டிஎஸ்பி அசோ கன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், பட்டா வைத்துள்ளவர்களின் இடங்களில் தற்போதைக்கு நாங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை,  ஆனால், பிற ஆக்கிரமிப்பாக உள்ள  இடங்கள் உடனே அதிரடியாக அகற்றப்பட வேண்டும். அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும், மீறி போராட்டத்தில் ஈடுபட்டால், கைதுசெய்து விட்டு அகற்ற வேண்டிய  நிலை ஏற்படும் என்றார். இதனை தொடர்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டு, தாராசுரம் கோயிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் 26 சென்ட் நிலம் நீக்கப்பட்டது.

;