குடவாசல், டிச.8- குடவாசல் ஜி.டி. குரூப் ஆப் கம்பெனியின் நிர்வாகியும், வழக்கறிஞருமான சிவசங்கர னின் மற்றொரு புதிய நிறுவனமான குபேரா சூப்பர் மார்க்கெட் குளிர்சாதன பல்பொருள் அங்காடி குடவாசல்-திருவாரூர் சாலையில் உள்ள ஜி.டி.மஹால் அருகே வியாழனன்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் கலந்து கொண்ட சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி விற்ப னையை துவக்கி வைத்தார். ஜி.டி மஹால் உரிமையாளர் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜி.தனபாலன் வரவேற்றார். விழாவில் குடவாசல் வட்டாட்சியர் குரு நாதன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் குணசேகரன், காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் தினகரன், சாக்கோட்டை பெரும் வணிகர் கார்த்திக், குடவாசல் பெரும் வணிகர் ராஜா ராமன் மற்றும் குடவாசல் வர்த்தக பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.