districts

img

இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

தஞ்சாவூர், அக்.18 - ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும், இந்தியை திணிக்கும் முயற்சியைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை திரும்பப் பெறக் கோரியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி முன்பு செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்க கிளைத் தலைவர் பிரேம் தலைமை வகித்தார். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கு.சந்துரு, மாவட்டத் தலை வர் வே.அர்ஜூன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கும்பகோணம்
கும்பகோணம் அரசினர் ஆண்கள்  கல்லூரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட துணைத் தலைவர் மணி கண்டன் தலைமை வகித்தார். துணைச்  செயலாளர் பிரதீப் ஜேம்ஸ், சக்தி,  ராஜேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர்  சங்க மாவட்ட துணை செயலாளர் சிவ சக்தி, மாவட்டச் செயலாளர் ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகேஷ், கல்லூரி மாணவர்கள் புரு ஷோத்தமன், இந்திய மாணவர் சங்கத் தின் மாநிலக் குழு உறுப்பினர் சுஜித் ஆகியோர் பங்கேற்றனர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழ கத்திற்கு உட்பட்ட துவாக்குடி அரசு  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வலியு றுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் செவ்வாயன்று கல்லூரி முன்பு  போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மார்க்சியா தலைமை வகித்தார். மாநில துணை  செயலாளர் ஜி.கே.மோகன், மாநகர் மாவட்ட தலைவர் சூர்யா, புறநகர் மாவட்ட செயலாளர் கோபி ஆகியோர்  கலந்து கொண்டனர்.  இந்தி திணிப்பு மற்றும் கூடுதல் பேருந்து இயக்கக் கோரி தந்தை பெரி யார் அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரி முன்பு கிளை செயலாளர் விக்ரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் ஜி.கே. மோகன் கண்டன உரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ் வரன் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

;