districts

img

மாணவர்களின் ஆய்வுகளில் தேவை புதுமை தமிழ் பல்கலை., துணைவேந்தர் வலியுறுத்தல்

தஞ்சாவூர், நவ.17- மாணவர்கள் மேற் கொள்ளும் ஆய்வுகள் புது மையாக இருக்க வேண்டும் என்றார் தஞ்சாவூர் தமிழ்ப்  பல்கலைக்கழகத் துணை வேந் தர் வி. திருவள்ளுவன். இப்பல்கலைக் கழ கத்தில் கல்வி நிலை ஆய்வு  இயக்ககம்  சார்பில் நடை பெற்ற ஆய்வு மாணவர்கள் அறிமுக விழாவுக்கு தலைமை  வகித்த அவர் மேலும் பேசிய தாவது: மாணவர்கள் குறிப்பிட்ட கால எல்லைக்குள் முனை வர் பட்டத்தை முழுமையாக முடிக்க வேண்டும். மாண வர்கள் மேற்கொள்ளும் ஆய்வு மிகவும் சிறப்பாக வும், புதுமையாகவும் இருக்க வேண்டும். மேலைநாட்டுப் பங்களிப்புடன் புதிய ஆய்வு களாக எடுத்துக் கொள்ள வேண்டும். பொய்மைகளை நீக்க மெய்மைகளைக் கண்  டறியும் ஆய்வாக இருக்க வேண்டும் என்றார் துணை வேந்தர். சென்னை அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி முதன்மையர் ஆர்.ஜெய வேல் பேசுகையில், மாண வர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகள் புதுமைத்தன்மை  தரக்கூடியதாக இருக்க வேண் டும். ஆய்வு மாணவா்கள் எழுதக்கூடிய நூல்கள் சமு தாயத்துக்கு நல்ல பயன் தரக்கூடியதாக அமைய வேண்டும். ஒருங்கிணைந்த இளநிலைப் பட்டப்படிப்பு படித்தாலும், முனைவர் பட்டம் படிக்கலாம் என்றார். பதிவாளர் (பொறுப்பு) சி. தியாகராஜன் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக, கல்வி நிலை ஆய்வு இயக் கக இயக்குநா் ஜெ.தேவி வரவேற்றார்.  துணை இயக்குநர் வீ.செல்வகுமார் நன்றி கூறினார்.

;