districts

லாரியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்தல்: 3 பேர் கைது

தஞ்சாவூர், ஆக.26 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே நள்ளிரவில் கிராமத்திற்குள் வந்த லாரியை கிராமத்தினர்  பிடித்து, ‘ஆடு திருட வந்தவர்கள்’ என நினைத்து பேராவூரணி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.  காவல் துறையின் விசாரணையில், அவர்கள் வந்த  லாரியில் ரகசிய அறை அமைத்து மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 460 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  பேராவூரணி அருகே உள்ள பின்ன வாசல் கிராமத்தில் நள்ளிரவில் லாரி ஒன்றும்,  அதற்கு முன்னால் லோடு ஆட்டோ ஒன்றும்  ஊருக்கு ஒதுக்குப்புறமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. அந்த வழியாக வந்த கிராம மக்கள், ஊருக்குள் ஆடு திருடுவதற்காக வந்துள்ளார்கள் என நினைத்து அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள்  முன்னுக்குப் பின் முரணாக உளறியதால், இரண்டு வாகனங்களையும், ஓட்டிவந்த இரு வரையும் பேராவூரணி காவல்துறையில் ஒப்ப டைத்தனர்.  காவல்துறையினர் நடத்திய விசாரணை யில், லாரியை ஓட்டி வந்தவர் தேனி மாவட்டம் பாவுண்டார்பட்டியை சேர்ந்த படையப்பா  (24) என்பதும், லோடு ஆட்டோவை ஓட்டி  வந்தவர் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த ரமேஷ்குமார் (40) என்பதும் தெரிய வந்தது. பின்னவாசல் கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் (50) என்பவருக்கு 30 கிலோ கஞ்சாவை கொடுத்து விட்டு, அடுத்த ஊருக்கு  செல்வதற்காக நின்றபோது கிராம மக்கள்  ஆடு திருடர்கள் என பிடித்து ஒப்படைத்துள்ள னர்.  பேராவூரணி வழியாக நாகப்பட்டினம் வரை உள்ள கஞ்சா சில்லரை வியாபாரி களுக்கு விற்பனை செய்யக் கொண்டு வந்த தாக கூறப்படுகிறது. பேராவூரணி காவல்  நிலையத்தில், தஞ்சை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ரவளிப்பிரியா கந்தபுனேனி, பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப் பாளர் பிரிதிவிராஜ் சவுகான் ஆகியோர் விசாரணை நடத்தினர். பிடிபட்ட கஞ்சா மதிப்பு  ரூ. 1 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து பேராவூரணி காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து கஞ்சா அனுப்பி  வைத்த, ஆந்திராவை சேர்ந்த மொத்த வியாபாரி மற்றும் பேராவூரணி கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள சில்லரை வியா பாரிகளையும் தேடி வருகின்றனர்.

;