districts

img

‘மதிப்பெண் மட்டுமே உங்களை மதிப்பீடு செய்வதில்லை’ தேர்வெழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை

தஞ்சாவூர், மே 8 - தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை  தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப் பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை யொட்டி, செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட, “ஓயா உழைப்பின் ஓராண்டில் அரசின் அரும்பணிகள் அணிவகுப்பு” என்ற சாதனை மலரை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, தமிழக அரசு தலைமைக் கொறடா  கோவி.செழியன் ஆகியோர் வெளி யிட்டனர்.  பின்னர் பள்ளிக் கல்வித் துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளர்களிடம் கூறியதா வது:  “தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றும் முனைப்போடு முதல்வர் செயல் பட்டு வருகிறார். தஞ்சை மாவட்டத் திற்கு 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அறிவித்துள்ளார். பொது மக்களிடம் இருந்து 48,550 மனுக்கள்  பெறப்பட்டன. அதில் 31 ஆயிரம் மனுக் களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீத முள்ள மனுக்களுக்கு படிப்படியாக தீர்வு  காணப்படும்.  பெறப்பட்ட மனுக்களில் அதிகப்படி யாக பட்டா தொடர்பான பிரச்சனை கள்தான் இருந்தன. குறிப்பாக நீர்நிலை  புறம்போக்கு பகுதிகளில் பட்டா கேட்கப் பட்டிருந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவு  இருப்பதால், அதைக் கருத்தில் கொண்டு பட்டா கேட்டவர்களுக்கு என்ன மாற்று ஏற்பாடு செய்வது என  ஆலோசித்து வருகிறோம். அதே போன்று தமிழகம் முழுவதும் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்க ளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேலைவாய்ப்பு முகாம்கள் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகின்றன.  

பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் மையங்கள் இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இன்று ஒரு லட்சத்து 89 ஆயிரம் மையங்களை தாண்டி சென்று உள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என இல்லாமல் தனியார் சிபிஎஸ்சி பாடத்திட்டங்கள் படிக்கும் மாணவர்கள்கூட இல்லம் தேடி கல்வித்  திட்டங்களில் பயன் பெற்று வருகின்ற னர்.  தஞ்சை மாவட்டத்தில் 6,500-க்கும் மேற்பட்ட இல்லம் தேடிக் கல்வி மையங் கள் செயல்பட்டு வருகின்றன. இதனால்  1,04,124 குழந்தைகள் பயன்பட்டு வரு கின்றனர். மக்களைத் தேடி மருத்துவம் என்கிற திட்டம் தமிழகத்தின் முன்னோடி யான திட்டமாக உள்ளது. இதன் மூலம்  சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் பேர் பயன்  பெற்றுள்ளனர்.  மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் துணிந்து தேர்வை  சந்திக்க வேண்டும். மதிப்பெண்கள்  மட்டுமே மதிப்பீடு செய்யப்படுவ தில்லை. மாணவர்களின் திறமை தான் மதிப்பீடு செய்கிறது. சந்தோசமாக தேர்வு எழுதுங்கள். உங்களுக்கான தனித் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.  நெற்களஞ்சியமான தஞ்சை மாவட் டத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களும் கொண்டு வரப்படும். கூடு தல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பு டெல்டா  மாவட்டங்களுக்கு முதல்வர் வர  வேண்டும் என கோரிக்கை விடுத்துள் ளோம்”. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், தயாரிக்கப்பட்ட சாதனை விளக்க குறும்படத்தினை பார்வையிட்டனர்.