அய்யம்பேட்டை, அக்.1 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம் பேட்டையை அடுத்த கணபதி அக்ர ஹாரம் காவிரி பாலத்தின் அருகே உள்ள மெயின் சாலையின் குறுக்கே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது. இந்தச் சாலை யில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவ ரத்திற்கு இடையூறாக உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். மக்கள் பயன்பாட்டில் உள்ள இந்தத் தொட்டியை இடமாற்றம் ஏற்பாடு செய்ய வேண்டும் என வாகன ஓட்டி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.