கும்பகோணம், மார்ச் 21- தஞ்சாவூர் மாவட்டம் திருநறையூர் - நாச்சியார் கோவிலில் இயங்கிவரும் அல் அமானத் பைத்துல்மால் கமிட்டியின் சார்பாக வட்டியில்லா பொருளாதார விழிப்பு ணர்வு கூட்டம் மற்றும் இஸ்லாமிய பொருளாதார வினா- விடை போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி, உமர் (ரலி) பள்ளிவாசல் வளாகத்தில் அதன் துணை செயலாளர் ஒளி முகமது தலைமையில் நடைபெற்றது. அல் அமா னத் பைத்துல்மால் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்றனர். ஹுசைன் மன்பஈ பொருளாதார நிலை அன்றும் இன்றும், முஹம்மது ஃகாலித் உமரி இறையச்சத்தை மேம்படுத்தும் ஜக்காத் என்ற தலைப்பில் சிறப்பு ரையாற்றினர். இஸ்லாமிய பொருளாதார வினா விடை போட்டியில் வெற்றி பெற்ற 11 மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.