districts

img

மக்கள் நேர்காணல் முகாமில்  நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தஞ்சாவூர், செப்.29- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஆண்டிக்காடு சரகம், கொள்ளுக்காடு ஊராட்சியில், “மக்கள் நேர்காணல் முகாம்” மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.  முகாமில், வீட்டுமனை, பட்டா, முதியோர் உதவித்  தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம்  கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 222 மனுக்  களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.  இதனை தொடர்ந்து வருவாய்த் துறை சார்பில் 505 பயனாளிகளுக்கு  ரூ.1 கோடியே 25 லட்சத்து 62 ஆயி ரத்து 417 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன.  முகாமில், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் சுகபுத்திரா, வரு வாய் கோட்டாட்சியர் பிரபாகர், வேளாண்மை இணை இயக்குநர் ஜஸ்டின், தனித்துறை ஆட்சியர்  தவளவன், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ராமச்சந்திரன், பேராவூ ரணி வட்டாட்சியர் த.சுகுமார், சேதுவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், ஒன்றியக்குழு உறுப்பினர் உ.மதிவாணன், ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

;