districts

ஆதனூர் அன்னாள் பள்ளியில் பரிசளிப்பு விழா

தஞ்சாவூர், மே 5- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா ஆதனூர் புனித அன்னாள் உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாண விகளுக்கு, கதை, கவிதை, கட்டுரை போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.  விழாவிற்கு, பெற்றோர்-ஆசிரியர் கழக  துணைத் தலைவர் சுபா.ஜான் டேவிட் நாதன் தலைமை வகித்தார். பேராவூரணி தொழிலதிபர் நீலகண்டன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர் குழந்தை யம்மாள் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் ஏஞ்சல் நன்றி கூறினார். ஆதனூர் பேரூராட்சி உறுப்பினர் காரல்மார்க்ஸ், பேராசிரியர் வேத. கரம்சந்த் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். விழாவில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.