districts

img

வீட்டிற்கு மின் இணைப்பு வசதி கோரி நெல்லியடிக்காடு கிராம மக்கள் மனு

தஞ்சாவூர், செப்.27 - நெல்லியடிக்காடு கிராமத்தில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் குடும்பங்களுக்கு, மின் இணைப்பு வசதி செய்து தர வேண்டும் என பேரா வூரணி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன் தலைமையில், நெல்லி யடிக்காடு கிராமத்தினர் அஞ்சம்மாள், சத்யா, கலா, கருப்பாயி, கண்ணன், முத்துக்குமார், முத்துச்சாமி, அருணா சலம் ஆகியோர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.  அதில், “தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி வட்டம் மணக்காடு ஊராட்சி, நெல்லியடிக்காடு கிராமத்தில், காளி யம்மன் கோயில் தெரு அருகில் சுமார்  30 குடும்பங்கள், கடந்த 50 ஆண்டுகளாக  குடியிருந்து வருகிறோம். எங்கள்  குடும்பங்களுக்கு மின் வசதி இல்லாத தால், பள்ளி செல்லும் குழந்தைகள் இரவில் படிக்க முடியவில்லை. மேலும்,  வீட்டு உபயோக மின் சாதனப் பொருட் கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதை யும் பார்க்க முடியவில்லை. செல்போ னுக்கு சார்ஜ் போடுவதற்குகூட பக்கத்து  தெருவிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.  இரவு நேரங்களில் விஷப் பூச்சிகள் நடமாட்டம் இருந்தாலும் தெரி யாத நிலையில், இருளில் பிள்ளை களோடு வசித்து வருகிறோம்.  இது தொடர்பாக ஆக.15 ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில்  மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. எனவே, வட்டாட்சியர் எங்கள் இடத்தை பார்வை யிட்டு, மின்சார வசதி செய்து தர வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

;