districts

img

மாணவர்களுக்கு ஆளுமைத்திறன் பயிற்சி சிங்கப்பூர் நிறுவனத்துடன் தமிழ் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

தஞ்சாவூர், ஆக.12 -  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் மாணவர்களை ஆளுமைத் திறன் பயிற்சி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகளுக்காக ஆயத்தப் படுத்தும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கை யெழுத்தானது.  சிங்கப்பூரின் ஏஸ் பன் னாட்டு நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தினை  விரைவில் செயல்படுத்த வுள்ளதாக, தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளு வன் தெரிவித்தார். சிங்கப்பூரைச் சேர்ந்த ஏஸ் பன்னாட்டுக் கல்வி மற்றும் பயிற்சிக்கான நிறுவ னத்துடனான இப்புரிந்து ணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதி வாளர் (பொ) முனைவர் சி.தியாகராஜன் மற்றும் ஏஸ் நிறுவன செயல் இயக்கு நர் டாக்டர் இராமநாதன்  ஆகியோர் கையெழுத்திட்ட னர். கற்றல் – கற்பித்தல் – களப் பணியாற்றல் ஆகிய மூன்று நிலைகளில் இந்த ஒப்பந்தம் செயல்பட வழி வகுத்துள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூரில் பயிலும் மாண வர்களுக்கு நவீனச் சூழ லுக்கு ஏற்ப ஆளுமைத்திறன் மற்றும் தலைமைத்துவப் பயிற்சி, மேலாண்மைக் கூறுகளில் பயிலரங்கங்கள் ஆகியவை இதன்வழி நடத் தப்பட உள்ளன. மேலும்,  இருதரப்பு ஆசிரியர்களுக் கான கருத்தரங்கப் பங்கேற்பு வாய்ப்புகள் மற்றும் புத்தொளிப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படும் என துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தெரிவித் தார்.  புரிந்துணர்வு ஒப்பந்தக் கையெழுத்து நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறைத் தலைவர் பேராசிரியர் இரா. குறிஞ்சிவேந்தன் ஒருங்கி ணைப்பு செய்திருந்தார்.

;