districts

ஆன்-லைனில் கடன் தருவதாக கூறி மோசடி: புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்

தஞ்சாவூர், அக்.22- ஆன்லைன் மூலம் கடன் தருவதாக  கூறி, தனியார் வங்கி உதவி மேலாளர்  புகைப்படத்தை ஆபாசமாக சித்த ரித்து பணம் கேட்டு மிரட்டியது தொ டர்பாக இணையதள குற்றப்பிரிவு காவ‌ல் துறை‌யின‌ர் விசாரணை நடத்தி வரு கின்றனர். தஞ்சாவூரைச் சேர்ந்த தனியார் வங்கியின் உதவி மேலாளர் ஒருவர், தஞ்சாவூர் இணையதளக் குற்ற காவல்  பிரிவில் புகார் மனு ஒன்றை கொடுத்துள் ளார். அதில், “எனது முகநூல் பக்கத்தில்  ஆன்-லைன் மூலம் கடன் தருகிறோம் என ஒரு விளம்பரம் வந்தது. மேலும்  கிரடிட் லோன் என்ற செயலியை பதி விறக்கம் செய்யுமாறு கூறப்பட்டது.  அதன்படி நானும் மொபைலில் பதி விறக்கம் செய்தேன். இதையடுத்து, எனது மொபைலில் கேலரி, தொடர்பு எண்கள், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல வற்றை, நான் அந்த செயலியில் கூறப் பட்டுள்ளது போல பதிவேற்றம் செய்து  கொண்டேன். பின்னர் உங்களுக்கு கடன் தருகிறோம். அதற்காக நீங்கள் கட்டணமாக ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. இதனால்  நான் அந்த கட்டணத்தை செலுத்தா மல் வெளியேறி விட்டேன்‌‌. சில நாட்கள் கழித்து எனது வங்கி கணக்குக்கு ரூ.9 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. இந்த பணம் அந்த செயலி மூலம் வரவு வைக்கப்பட்டது என்பதை அறிந்தேன். இருந்தாலும் நான் அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.  சில நாட்கள் கழித்து, எனது போட் டோவை ஆபாசமாக மார்பிங் செய்து  எனது மொபைலுக்கு அனுப்பி இதனை  வெளியிடாமல் இருப்பதற்காக ரூ.14, 700 தர வேண்டும் என குறுந்தகவல் வந்தது. மேலும் மார்பிங் செய்யப்பட்ட  எனது போட்டோவை எனது உறவினர் களுக்கும் அந்த மர்ம நபர்கள் அனுப்பி  வைத்துள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன்.  ஏமாற்றப்பட்டோம் என்பதையும் உணர்ந் தேன். எனவே மர்ம நபர்களை கண்டு பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் தஞ்சாவூர் இணையதளக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், உதவி ஆய் வாளர் கார்த்தி ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

;