districts

கிடப்பில் உள்ள புகார் மனுக்கள் மீது குடவாசல் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? எஸ்.பி.யிடம் சிபிஎம் மனு

குடவாசல், ஜூன் 8 - கடந்த ஒரு வருடமாக குடவாசல் காவல் நிலையத்தில் பொதுமக்கள் அளித்துள்ள புகார் மனுக்கள் மீது  எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல்  கிடப்பில் உள்ளதாக, சிபிஎம் குடவாசல்  தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர். லெட்சுமி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அம்மனுவில், “மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குடவாசல் கிளை உறுப்பினர் விஜயன், கடந்த மே 7  ஆம் தேதி இரவு மர்மமான முறையில்  உயிரிழந்தார். இறந்து போன விஜய னின் மரணம் விபத்தா அல்லது திட்ட மிட்ட படுகொலையா என தெரியாத நிலையில், அன்றே குடவாசல் காவல்  நிலையத்தில் இறந்துபோன விஜயனின்  மனைவி புகார் மனு கொடுத்துள்ளார்.  ஆனால் குடவாசல் காவல்துறை யினர் இறந்து போன விஜயனுடன்  சம்பந்தப்பட்ட நேரத்தில்  இருந்த நபர் களைகூட இதுவரை விசாரிக்கவில்லை. இதில் மேற்கொண்டு எந்தவித நடவடிக் கையும் எடுக்காமல் இருப்பதால், இறந்துபோன விஜயனின் வயதான தாய்-தந்தை  தனது மகனின் இறப்புக்கு காரணம் தெரியாமல் காலத்தை தள்ளி வருகின்றனர். மேலும்,  விஜயனின் உடற்கூராய்வு முடிவு, பெரும் முயற்சிக்கு பின் கடந்த ஜூன் 5  ஆம் தேதிதான் கிடைத்துள்ளது. இதேபோல் குமாரமங்கலம் திலக வதி என்ற கர்ப்பிணியை தாக்கிய வழக் கில், சம்பந்தப்பட்ட நபர் மீது பாதிக்கப் பட்ட கர்ப்பிணி பெண் உடனே புகார் மனு கொடுத்தும், தொடர் முயற்சிக்குப் பின் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை. இதேபோல் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.  

உதாரணங்களாக, கண்டிர மாணிக்கம் கிராமத்தை சார்ந்த புனிதா  என்ற பெண் நகை கொள்ளை போனது  பற்றிய புகார், சீதக்கமங்கலம் மாற்றுத் திறனாளி ஒருவர் கொடுத்த புகார்,  திருக்குடி பொன்னமாளின் சொத்தை பறிமுதல் செய்து, அவரை செருப்பால்  அடித்த தீண்டாமை கொடுமை புகார், பிலாவடி சுமதி வீராச்சாமி வீடு கட்டு வதை தடுத்து தாக்கியது உட்பட குட வாசல் காவல் நிலையத்தில் பாதிக்கப் பட்டோர் கொடுத்த 18 புகார்கள் மீதும்  எந்தவித  விசாரணையும் இல்லை. மேலும் பல்வேறு குற்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் புகார் கொடுத்தும், பல வழக்குகள் நிலுவை யில் உள்ளதாக” குறிப்பிடப்பட்டுள்ளது. மனு கொடுக்கும் போது மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு  உறுப்பினர்கள் டி.ஜி.சேகர், கே.பகத்சிங்  மற்றும் புகார்தாரர்கள் உடனிருந்தனர். பொதுமக்கள் தங்கள் பிரச்சனை குறித்து காவல் நிலையத்தில் புகார்  கொடுத்தும் சம்பந்தப்பட்ட நபர் மீது  காவல்துறையினர் உரிய விசாரணை  செய்யாததால், வழக்கு காலதாமதமாகி  சின்னதாக உள்ள வழக்குகூட பெரிய வழக்காக மாறி பெரும் அபாயத்தை உருவாக்கி விடுகிறது. இதனால் பாதிக் கப்பட்ட பொதுமக்கள் காவல்துறை மீது அதிருப்தியும், அவநம்பிக்கையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

;