districts

img

மாதர் சங்க அமைப்பு தின கொடியேற்று விழா

தஞ்சாவூர், டிச.9 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தினத்தை (டிச.9) முன் னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப் பேட்டை ஒன்றியம், இராராமுத்திரைக் கோட்டையில், மாதர் சங்கத்தின் கொடியேற் றப்பட்டு உறுப்பினர் சேர்க்கையும் நடை பெற்றது. மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பி னர் ஆர்.கலைச்செல்வி கொடியேற்றி வைத்தார்.
கும்பகோணம் 
மாதர் சங்கத்தின் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம் சார்பில் திருவிடைமரு தூரில் உள்ள தோழர் பி.ஆர்.நினைவகத்தில்  சங்க கொடியேற்றி கொண்டாடப்பட்டது. சங்க கொடியை மாதர் சங்க ஒன்றியச் செய லாளர் அம்சவல்லி ஏற்றினார். திருவிடைமரு தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.