districts

img

உள்ளாட்சி இடைத்தேர்தல் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் வெற்றி

தஞ்சாவூர்,  ஜூலை 12 - தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினத்தில் நடந்த  உள்ளாட்சி இடைத்தேர்த லில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றன.  தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் வடபாதி ஊராட்சி, உடை யார்கோவில் ஊராட்சி,  3  ஆவது வார்டு உறுப்பினருக் கான இடைத்தேர்தலில், வாலிபர் சங்கத்தின் அம்மா பேட்டை ஒன்றியச் செயலா ளர் சரவணனின் மனைவி சுபஸ்ரீ 140 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற சுபஸ்ரீக்கு, சிபிஎம் அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப் போது, சிபிஎம் நகரச் செய லாளர் ரவி, விவசாயத் தொழி லாளர்கள் சங்க ஒன்றியச் செயலாளர் கே.கே.சேகர், ஒன்றியக்குழு உறுப்பினர் வி.மயில்வாகனன், வாலிபர்  சங்க ஒன்றியச் செயலாளர் சரவணன், ஒன்றியத் தலை வர் கார்த்திக், வாலிபர் சங்க  ஒன்றியக்குழு உறுப்பினர் கள் உடனிருந்தனர்.

கும்பகோணம்
தஞ்சை மாவட்டத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கு  கடந்த ஜூலை 9 அன்று தேர்தல் நடந்தது. திருப் பனந்தாள் ஒன்றியத்தில் உள்ள திருலோகியில் 2-வது வார்டு, கும்பகோணம் ஒன்றியத்தில் 9-வது வார்டு உள்பட தஞ்சை மாவட்டத்தில் 8 இடங்க ளில் இடைத்தேர்தல் நடை பெற்றது. அதேபோல் திரு விடைமருதூர், திருப்பனந் தாள், கும்பகோணம் ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கும் தேர்தல்  நடைபெற்றது. திருப்பனந் தாள் ஒன்றியத்தில் உள்ள திருலோகி 2-வது வார்டு தேர்தலில் 248 வாக்குகள் பதிவாகின. இதில் திறவு கோல் சின்னத்தில் 132 வாக்குகள் பெற்று தி.மு.க. வைச் சேர்ந்த கஸ்தூரி முருகன் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற வார்டு உறுப்பினருக்கு தேர்தல் அலுவலர் சுதா சான்றிதழ் வழங்கினார்.

நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட் டம் கீழையூர் ஒன்றியம் 12  ஆவது வார்டு வேட்டைக்கார னிருப்பு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பில்  போட்டியிட்ட ச.நாகரத்தி னம் 2006 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திரு மருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி தலைவருக்கு போட்டியிட்ட ஹாஜா நஜி முதீன் 1418 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சங்கமங்கலம் ஊராட்சி யில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட சூ. செல்வம், தலைஞாயிறு  ஒன்றியம் பனங்காடி  ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வ. கோமதி, திருமருகல் ஒன்றி யம் ஆதலையூர் ஊராட்சி யில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட முகமது அன்வர்தின் ஆகி யோர் வெற்றி பெற்றனர். கீழையூர் ஒன்றியம் மடப் புரம் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு ம. வனிதா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குடவாசல்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி ஒன்றி யம் நெடுஞ்சேரி கிராம  ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுகவை சேர்ந்த சிவ சங்கர் 473 வாக்குகள் பெற்றுள் ளார். விசுவநாதன் 211 வாக்குகள் பெற்றுள்ளார். 262 வாக்குகள் வித்தியா சத்தில் சிவசங்கர் வெற்றி பெற்றார். சீதக்கமங்கலம் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பாரதிமோகன் 65 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதற்கு அடுத்தபடியாக ராஜா 56 வாக்குகளும், தமிழ்ச்செல்வன் 52 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவினர். வெற்றி பெற்றவர்களுக்கு குடவாசல் ஊராட்சி ஒன்றிய  வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் வெற்றி சான்றிதழ் வழங்கினார்.

;