districts

img

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜன.6-  புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீ்ண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சரண் விடுப்பை அரசு  வழங்க வேண்டும், அரசாணை 115,  152 ரத்து செய்ய வேண்டும், அக விலைப்படி நிலுவைத் தொகையை  வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப் பினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே வியாழனன்று நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சத்தியசீலன், இளையராஜா, ரெங்க சாமி ஆகியோர் தலைமை வகித்த னர்.
திருவாரூர் 
திருவாரூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங் கிணைப்பாளர்கள் வி.சோம சுந்தரம், பெ.ரா.ரவி, சிவகுரு ஆகி யோர் தலைமை வகித்தனர்.
திருச்சிராப்பள்ளி 
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திர சேகர், உதுமான் அலி, பால்பாண்டி  ஆகியோர் தலைமை வகித்தனர். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பெரியசாமி, மாவட்ட நிதி காப்பாளர் ஆரோக் கியராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் 
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.தி.அன்பழகன் தலைமை வகித்தார். மாநில உயர்மட்டக்குழு உறுப்பி னர்கள் ப.அந்துவன்சேரல், பா. ராணி, மாவட்ட நிதிக் காப்பாளர்  காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கரூர்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் எம்.சுப்பிரமணியன், ஆ.மலைக்கொழுந்தன், வேலு மணி, இருதயசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். அரசு ஊழியர்  சங்க மாநில துணைத்தலைவர்கள் மொ.ஞானத்தம்பி, மு.செல்வ ராணி, கரூர் மாவட்டச் செயலாளர்  கெ.சக்திவேல் உள்ளிட்ட தோழமை  சங்கங்களின் தலைவர்கள் கலந்து  கொண்டனர்.

;