districts

தஞ்சை பெரிய கோயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆய்வு

தஞ்சாவூர், ஜன.29 - தஞ்சாவூர் பெரிய கோயிலில் மத்திய  தொழில் பாதுகாப்பு படையினர் வெள் ளிக்கிழமை களஆய்வு மேற்கொண்ட னர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்க ளில், திடீரென தீவிரவாத தாக்குதல் கள் நடைபெற்றால், அதிலிருந்து பொது மக்களை எப்படி காப்பாற்றுவது, அந்த  இடங்களில் உள்ள வசதிகள் என் னென்ன என்பது குறித்து மத்திய தொ ழில் பாதுகாப்பு படையினர் ஒவ்வொரு ஆண்டும் முக்கியமான பகுதிகளில் கள  ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சென்னையில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையின் துணை கமாண்டர் சோலைராஜன் தலை மையில் 12 பேர் கொண்ட படையினர் வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வந்தனர். பெரிய கோயிலில் நாளொன்றுக்கு எவ்வளவு பேர் வருகிறார்கள், எந்தெந்த  சன்னதியில் சுவாமி தரிசனம் செய்கிறார் கள், சுற்றுலாவாக எவ்வளவு பேர் வரு வார்கள், பெரிய கோயிலுக்குள் செல் லும் நுழைவு வாயில், வெளியேறும் வாயில், அவசர வாயில் குறித்து இந்திய  தொல்லியல் துறையின் முதுநிலை பரா மரிப்பு அலுவலர் சங்கர், மத்திய தொழில்  பாதுகாப்பு படையினரிடம் எடுத்துக் கூறினார்.

பின்னர் நுழைவு வாயில், வெளியே றும் வாயில்கள், அவசர வாயில்கள், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில்  ஈடுபடும் பகுதி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டனர். மேலும், கண்கா ணிப்பு கேமராக்கள் செயல்படும் விதம்  குறித்தும் கேட்டறிந்தனர். இந்த படையினருக்கு தேவையான தகவல்களை இந்திய தொல்லியல் துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான அலுவலர்கள் எடுத்துக் கூறினர். பின்னர், வெள்ளிக்கிழமை மாலை தஞ்சாவூர் அரண்மனைக்குச் சென்று அங்குள்ள கலைக்கூடம், ஆயுத கோபுரம், மணிக்கோபுரம், சரஸ்வதி மகால் நூலகம், தர்பார் ஹால் ஆகிய வற்றையும் பார்வையிட்டனர்.