districts

மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.57.49 லட்சம் நலத்திட்ட உதவிகள்

தஞ்சாவூர். மே 17 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்  குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ரூ.57,49,129 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, மாவட்ட  ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், சத்துணவுத் திட்டத்தின் கீழ், பள்ளி சத்துணவு மையங்களில் பணி புரிந்து வரும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு சிறந்த சமையலர் மற்றும் உதவியாளர் விருது, பாராட்டுச் சான்றி தழ் ரூ.5,000 ரொக்கப்பரிசு இரண்டு நபர்க ளுக்கும், மாவட்ட அளவில் நடைபெற்ற சமையல் போட்டியில் வெற்றி பெற்ற இரண்டு  நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், ரூ.2,500 முதல் பரிசு, ரூ.1800 இரண்டாம் பரிசுக் கான காசோலையை ஆட்சியர் வழங்கினார்.  மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்  துறை சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வா தார இயக்கம் மூலம் மதுக்கூர் வட்டம் ஆலத்தூர் ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பு பெருங்கடன் ரூ.49 லட்சம் மதிப்பில்  காசோலையும், துபாய் மற்றும் சவுதி அரேபியா  ஆகிய நாடுகளில் பணியின்போது இறந்த மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கு சட்டப் படியான நிலுவை தொகை, ரூ.8,35,129  மதிப்பிலான காசோலையும் ஆட்சியர் வழங்கினார். முன்னதாக பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 344  மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர்.  திருவாரூர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்று தல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த  269 மனுக்கள் பெறப்பட்டன.

;