districts

தங்கு கடல் மீன் பிடிப்புக்கு அனுமதி வழங்குக! விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

தஞ்சாவூர், செப். 7-  தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு மீனவர்  சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் மல்லிப் பட்டினம் துறைமுக ஏலக்கூட வளாகத்தில், தஞ்சை மாவட்ட விசைப்படகு சங்கத் தலை வர் ஏ.ராஜமாணிக்கம் தலைமையில் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் ஏ.வடுக நாதன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  டீசல் விலை உயர்வால் மீனவர்கள்  கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இலங்கை கடல் எல்லை மிக அருகில்  இருப்பதாலும், அரசின் சட்ட விதிகளின்படி ஐந்து நாட்டிகல் மைல்களுக்கு அப்பால் தான் மீன்பிடிக்க வேண்டும் என்ற விதிப்படி யும், தொழில் செய்வதால் அதிகப்படியான டீசல் செலவும், மீன்பிடிப்பு பகுதி குறை வான இடங்களே இருப்பதால், பிடிபடும் மீன்களும் குறைவாக வருவதாலும், தொ டர்ந்து தொழில் நஷ்டம் ஏற்படுகிறது.  இதற்கு மாற்று ஏற்பாடாக தங்கு கடல் மீன்பிடித்தல் ஏற்பாடு செய்தால் மீனவர்கள் நட்டத்திலிருந்து தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும். எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தில் தங்குகடல் மீன் பிடிப்புக்கு அனுமதி வழங்குவது போல்  மூன்று முதல் ஐந்து நாட்கள் சர்வதேச கடல்  பகுதியான தூரக் கடல் சென்று மீன் பிடிக்க  அனுமதிக்க வேண்டும்.  பாக். ஜலசந்தி பகுதியில் 42 ஆண்டு களுக்கு முன்பு விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் இருவரும் பிரச்சனை இன்றி தொழில் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதன்படி ஞாயிறு, செவ் வாய், வியாழன், வெள்ளி ஆகிய 4 நாட்கள்  நாட்டுப்படகுகள் கடலுக்குச் சென்று தொழில்  புரிந்து மறுநாள் கரை திரும்ப வேண்டும்.  விசைப்படகுகள் சனி, திங்கள், புதன் தொழிலுக்கு சென்று மறுநாள் கரை திரும்ப வேண்டும். இந்த ஒப்பந்தப்படி, கடந்த  10 ஆண்டுகளுக்கு முன்பு வரை விதிப்படி  தொழில் புரிந்தனர். தற்போது நாட்டுப்படகு மீனவர்கள் சிலர் ஒப்பந்தத்தை மீறி எல்லா நாட்களிலும் தொழிலுக்கு சென்று  வருகின்றனர். இதனால் விசைப்படகு மீன வர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.  எனவே தற்போது உள்ள சூழ்நிலையை கணக்கில் கொண்டு தங்கு கடல் மீன் பிடிக்கும் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு, மீனவர்களுக்கான டீசல் அளவை உயர்த்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
வேலை நிறுத்தம் 
இதனை அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்தி, செப்.7 (புதன் கிழமை) காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததில் விசைப்படகு மீனவர்கள்  ஈடுபட்டனர். இதனால் மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான விசைப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வில்லை.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை 
விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த  போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து, நாகப் பட்டினம் மீன்வளத்துறை இணை இயக்கு நர் இளம்பருதி, தஞ்சை மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குநர் சிவகுமார் ஆகியோர் புதன்கிழமை விசைப்படகு மீன வர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி னர். இதில் மீனவர்கள் பிரச்சனைக்கு ஒரு  மாத காலத்தில் தீர்வு காணப்படும் என உறுதி யளித்தனர். இதை ஏற்று மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கை விட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

;