districts

img

‘குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்’ பட்டுக்கோட்டையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

தஞ்சாவூர், ஜூலை 13 - “என் குப்பை, என் பொறுப்பு” என்ற தலைப்பில், ‘மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகளை’ தரம் பிரித்து தூய்மைப் பணி யாளர்களிடம் வழங்க வேண்டும். நகரின் தூய்மையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.  நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார் தலைமையில் சைக்கிள் பேரணியை, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை கொடிய சைத்து தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் (பொ) குமார் முன்னிலை வகித்தார். பேரணி பேருந்து நிலையத்தில் தொடங்கி மணிக்கூண்டு, தேரடித் தெரு, கடைவீதி என முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.  இதில் தஞ்சாவூர் மாவட்ட சைக்கிள்  அசோஷியேசன், மனோரா ரோட்டரி சங்கம்,  மிட் டவுன் ரோட்டரி சங்கம், பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம், அரசு ஆண்கள், பெண்கள்  மேல்நிலைப்பள்ளி, புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித தாமஸ்  உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், ஆர்கானிக்கல் அனானிமஸ் அமைப்பு, தன்னார்வலர்கள், பாஸ்கட் பால் அசோசி யேஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வீடு களில் சேகரமாகும் குப்பைகளை, தனித்தனி யாக தரம் பிரித்து தூய்மைப் பணியாளர் களிடம் வழங்க வேண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

;