தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தில் லயன்ஸ் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் லயன்ஸ் கிளப் சாசனத் தலைவர் பழனியப்பன், மண்டல ஒருங்கிணைப்பாளர் துரைசாமி, தலைவர் சந்தோஷ், செயலர் ராமச் சந்திரன், பொருளாளர் லெட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.