districts

img

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி வகுப்பு

தஞ்சாவூர், செப்.18- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தஞ்சாவூர் மாவட்டக் கிளை சார்பில் 30  ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.  பயிற்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் து. ரோசி தலைமை வகித்தார். அறிவியல் இயக்க  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரா.மாரியப்பன் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர் நாராயணசாமி, மாவட்ட கௌரவத் தலை வர் கார்த்திகேயன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாநில ஒருங்கிணைப்பா ளர் பேரா.வெ.சுகுமாரன், மாவட்டச் செயலாளர் லெ. முருகன் ஆகியோர் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தொடர்பாக அறி முக உரையாற்றினர். மாநி லச் செயலாளர் ஸ்டீபன்நா தன் வாழ்த்தி பேசினார்.  தேசிய குழந்தைகள் அறி வியல் மாநாட்டிற்கான வழி காட்டி ஆசிரியர் பயிற்சியை  தஞ்சை மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் மு. சிவகுமார் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பேராசிரியர்கள் ஆசிரி யர்களுக்கு பயிற்சியளித்த னர். அறிவியல் இயக்கத் தின் மாவட்டத் துணைச் செயலாளர்கள் மஞ்சுளா, அருணாதேவி, துணைத் தலைவர்கள் முருகானந்தம் தியாகராஜன், துளிர் ஒருங்கிணைப்பாளர் முரு கானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பயிற்சியில், சமீபத்தில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற அறிவியல் இயக்கத்தை சார்ந்த ஆசிரி யர்கள் சந்திரா, சத்யா ஆகி யோர் முதன்மை கல்வி அலு வலரால் கௌரவிக்கப்பட்ட னர். இப்பயிற்சியில் 300 ஆசிரியர்கள் கலந்து கொண் டனர். மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.

;