districts

img

வாழ்வாதாரத்திற்கு  ஏற்பாடு செய்த ஆட்சியர் மாற்றுத்திறனாளிகள் நெகிழ்ச்சி  

தஞ்சாவூர், மே 19- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தில் 12 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்கள் பிழைப்புக்கு ஏதேனும் வழிவகை செய்திடுமாறு கோரிக்கை விடுத்தனர்.  இந்நிலையில், கடந்த வாரம் தஞ்சை மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புனல்வாசல் கிரா மத்திற்கு வந்து மாற்றுத்திறனாளிகளை சந்தித்து அவர்க ளுடைய பிரச்சனைகள், தேவைகள் குறித்தும் கேட்ட றிந்தார்.  தொடர்ந்து, அதிகாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளி களிடம் ஆலோசனை நடத்திய பிறகு, தஞ்சை மகாராஜா சில்க்ஸ் நிறுவன தொழிலதிபர் முகம்மது ரஃபி உடன் பேசினார். இதையடுத்து, புனல்வாசல் ஊராட்சி கிராம சேவை கட்டிடத்தில், மாற்றுத்திறனாளிகள் 12 பேருக்கு இரண்டு மாத கால தையல் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சிக்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் தவமணி வரவேற்றார். பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பிரபாகரன், தொழிலதிபர் முகமது ரஃபி, ஒன்றி யக் குழு தலைவர்கள் சசிகலா ரவிசங்கர் (பேராவூரணி), மு.கி.முத்துமாணிக்கம் (சேதுபாவாசத்திரம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

;