districts

img

சிறுதானியங்களையும் விவசாயிகள் அதிகளவில் உற்பத்தி செய்ய வேண்டும் உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சக செயலாளர் கருத்து

தஞ்சாவூர், செப்.19 - தஞ்சாவூரில் உணவு தொழில்நுட்ப பொருட்காட்சியை, மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சகத்தின் செயலர் அனிதா பிரவீன் தொடங்கி வைத்தார். மத்திய அரசின் உணவு பதப்படுத் துதல் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ்  இயங்கும் தேசிய உணவு தொழில்நுட் பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில், நிறுவன  துவக்க நாளை முன்னிட்டு, சிறுதானிய  அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் நவீன பதனிடும் முறைகள் குறித்து  இரண்டு நாட்கள் உணவு தொழில்நுட்ப பொருட்காட்சி நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா தேசிய உணவு  தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் நடைபெற்றது. விழாவுக்கு வந்தவர் களை நிறுவனத்தின் இயக்குநர் (பொ) எம்.லோகநாதன் வரவேற்றார். இதில்  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல் வர் எஸ்.மருதுதுரை, ஈச்சங்கோட்டை வேளாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி கல்லூரி முதல்வர் ஏ.வேலாயுதம், குமு ளூர் வேளாண் பொறியியல் கல்லூரி  மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர்  பி.ராஜ்குமார் ஆகியோர், சிறுதானிய பயிர்கள், உணவுப் பொருட்கள் தொடர் பாக மாநில அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு களை வழங்கினர். உணவுப் பதப்படுத்துதல் தொழில் கள் அமைச்சகத்தின் செயலர் அனிதா பிரவீன் காணொலி வாயிலாக கண் காட்சியை தொடங்கி வைத்து பேசுகை யில், “நெல் உற்பத்தியில் தஞ்சாவூர் மாவட்டம் சிறந்து விளங்குகிறது.

நெல் உற்பத்தியோடு, சிறு தானியங்களை யும் அதிக அளவில் விவசாயிகள் உற்பத்தி செய்ய வேண்டும். சிறுதானி யங்களின் பயன்பாடு நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. சிறுதானியங் கள் வழியாக பல மதிப்பு கூட்டப்பட்ட  பொருட்கள் மூலம் நமக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. இதன் மூலம் பொருளாதாரமும் உயர வாய்ப்புள்ளது. சிறுதானியங்களில் பல  வகையான உணவு பொருட்களை கொண்டு வர இந்நிறுவனம் பல்வேறு ஆலோசனைகளையும், வழிகாட்டுதல் களையும் மேற்கொண்டு வருவதால், விவசாயிகள், தொழில் முனைவோர் இதனை நல்ல முறையில் பயன்படுத் திக் கொள்ள வேண்டும்” என்றார். கண்காட்சியில், இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்று தொழில் முனைவோர் களாக முன்னேறியுள்ள 40 பேர் சிறுதானி யம் உணவு உற்பத்தி குறித்து விளக்கும்  பொருட்காட்சியை அமைத்துள்ளனர். முதல் நாளான வெள்ளியன்று ஆயிரக் கணக்கான பள்ளி, கல்லூரி மாண வர்கள் பொருட்காட்சியில் பங்கேற்று பார்வையிட்டனர். சனிக்கிழமை பொது மக்கள், விவசாயிகள், தொழில் முனை வோர்கள் கண்காட்சியை பார்வையிட்ட  னர்.

;