districts

நெல் பயிர் கதிர் விடும் நேரத்தில் மழை விவசாயிகள் கவலை

கும்பகோணம், டிச.14- நெல் பயிர் கதிர் விடும் நேரத்தில தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவ சாயிகள் கவலை அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திருவிடைமருதூர் தாலுகாவிற்குட்பட்ட 200-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி பகுதி களில், விவசாயிகள் சுமார் 2 லட்சம் ஏக்க ருக்கும் அதிகமாக சம்பா மற்றும் தாளடி  பருவத்தில் நெல் பயிர் சாகுபடி செய்துள்ள னர். சாகுபடி செய்யப்பட்டு மூன்று மாதங்க ளான நிலையில், அனைத்து பயிர்களும் கதிர்விடும் நிலையில் உள்ளன.  இந்நிலையில், மாண்டஸ் புயலால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப் பாக ஞாயிறு, திங்கள், செவ்வாய் இரவு மற்றும் பகல் நேரங்களில் தொடர்ந்து மழை பெய்தது. இதுமட்டுமின்றி, பனிப் பொழிவும் உள்ளது. இடைவிடாது மழை பெய்து வருவ தால், கதிர் வெளிவரும் நேரத்தில் மழை யினால் பதறாக போய் மகசூல் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்  துள்ளனர். மேலும் பனிப்பொழிவு அதிக மாக உள்ளதால், நெல் பயிர்களில் புகை யான் போன்ற பூச்சி தாக்குதல் ஏற்படும் என்று அச்சப்படுகின்றனர்.

;