districts

img

கண் தானம் விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர், செப்.7 -  தஞ்சாவூரில் கண் தான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  தஞ்சாவூர் மாவட்டப் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் லயன்ஸ் சங்கங்கள் இணைந்து நடத்திய கண்தான விழிப்புணர்வு பேரணி,  தஞ்சாவூர் புகைவண்டி நிலையத்தில் இருந்து, ராஜா மிராசுதார் கண் மருத்துவ மனை வரை நடைபெற்றது.  இதில், தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவர்கள், அரசு செவிலியர் பயிற்சி பள்ளி  மாணவிகள், குந்தவை நாச்சியார், பான் செக்கர்ஸ், சுவாமி விவேகானந்தா, மருது  பாண்டியர் கல்லூரி, மாணவ- மாணவியர் கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் 650 பேர்  இப்பேரணியில் கலந்து கொண்டனர்.  முன்னதாக தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் 37 ஆவது கண் தான இருவார விழாவினை முன்னிட்டு மாணவ, மாணவியர்கள் கண் தான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.மருதுதுரை, துணை இயக்குநர் மரு.நமச்சிவாயம் (சுகாதாரப் பணிகள்), மாவட்ட  பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட இயக்கு நர் மரு. ஞானச்செல்வன், லயன்ஸ் மாவட்ட  முன்னாள் ஆளுநர்கள் முகமதுரபி, மு.பிரேம், டி.மணிவண்ணன், முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

;