districts

img

திருபுவனத்தில் கல்வி முகாம்

கும்பகோணம், பிப்.6- தமிழ்நாடு அரசு கொறடாவும், திருவிடைமருதூர் சட்ட மன்ற உறுப்பினருமான கோவி.செழியன் ஏற்பாட்டில் திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருபு வனம் திகோ சிக்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி யில் மாபெரும் கல்வி முகாம் நடைபெற்றது. முகாமை தமிழ்நாடு அரசு கொறடாவும், திருவிடை மருதூர் சட்டமன்ற உறுப்பினருமான கோவி.செழியன் துவக்கி வைத்தார். 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களின் சந்தேகங்களை கல்வியாளர்கள் அருணாச்சலம், தனி யார் தொலைக்காட்சி நெறியாளர் ராஜபாரதி, தனியார் பயிற்சி மைய நிறுவனர் கொளஞ்சியப்பன் ஆகியோர் தீர்த்து வைத்தனர்.  நிகழ்ச்சியில் திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் சுபா திருநாவுக்கரசு, திருப்பனந்தாள் ஒன்றிய துணைத் தலைவர் கோ.க.அண்ணாதுரை, திகோ சில்க்ஸ் பள்ளி  தாளாளர் பஞ்சநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.