districts

img

கும்பகோணம் சிற்பக் கலைஞர் உருவாக்கிய உலகிலேயே உயரமான நடராஜர் சிலையை வேலூர் பொற்கோயிலுக்கு அனுப்பும் விழா

கும்பகோணம், அக்.7- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை திம்மக்குடி கிராமத்தில்,  கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ் என்ற  சிற்பச் சாலை உரிமையாளர் எஸ்.வரதராஜ னால், உலகிலேயே மிகவும் உயரமான ஆனந்த தாண்டவ நடராஜர் சிலை, 23 அடி  உயரமும், 17 அடி அகலமும், சுமார் 15 டன்  எடையில் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சிலை, 51 சிவ அட்சரத்தைக் குறிக்கும்  வகையில் 51 தீச்சுடர்கள், திருவாச்சியில் 52 சிம்மங்களையும், 56 பூதகணங்களையும், 102  தாமரை மலர்களையும், 2 மகர பறவைகளை யும், 34 நாகங்களின் உருவங்களையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.  இந்த நடராஜர் சிலையை, வேலூர் மாவட்டத்திலுள்ள பொற்கோயிலுக்கு அனுப்பும் விழாவில், கும்பகோணம் சட்ட மன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்ப ழகன் கலந்து கொண்டு, கொடியசைத்து தொடங்கி வைத்தார். அருகில், சிலையை உருவாக்கிய ஸ்தபதிகளான எஸ்.வரத ராஜன் எஸ்.சீனிவாசன், எஸ்.மயூப் ஆகியோர் இருந்தனர்.

;