districts

img

தஞ்சாவூரில் ரூ.48 கோடியில் வணிக வளாகம்

தஞ்சாவூர், மார்ச் 26-  தஞ்சாவூரில் ரூ.48 கோடியில் வணிக வளாகம் கட்டப்பட்டு வரு கிறது. இதில் ஒரே இடத்தில் மூன்று பிரபல தனியார் நகைக் கடைகளும், 45 பிற கடைகளும் இன்னும் இரு மாதங்களில் செயல்பட உள்ளது என மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார். தஞ்சாவூர் தெற்கு வீதியில் திரு வள்ளுவர் திரையரங்கம் இருந்த இடத்தை இடித்துவிட்டு, அந்த இடத் தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது.  இதனை சனிக்கிழமை பார்வை யிட்ட மேயர் சண்.ராமநாதன், நடை பெறும் பணிகள் குறித்து மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், பொறியாளர் கார்த்தி ஆகியோரிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது மாநக ராட்சி மண்டலக்குழுத் தலைவர் மேத்தா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

;