districts

img

ஒப்பந்ததாரர்களை மாற்றி மாற்றி தூய்மைப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையிலேயே வைத்துள்ள மாநகராட்சி

தஞ்சாவூர், மார்ச்.13- தஞ்சாவூர் ஆட்சியர் அலுலகத்தில், திங் கள்கிழமையன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் தலைமையில் நடைபெற்றது.  அப்போது, தஞ்சாவூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்  மைப் பணியாளர்கள், மாநகர தூய்மைப் பணி யாளர்கள் நலச்சங்கம் சார்பில், கோரிக்கை களை வலியுறுத்தி மனு அளித்தனர். அம்மனுவில், ‘‘கடந்த 2002 ஆம் ஆண்டு  முதல், நகராட்சியாக இருந்த காலத்திலிருந்து ஒப்பந்த நிறுவனங்கள் சார்பில், தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி சுமார் 250 பேர்  ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகி றோம். கடந்த 2002 – 2003 ஆம் ஆண்டு, ஒரு ஒப்பந்த காரரும், 2004 – 2005 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்த காரரும், 2006 முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஒரு ஒப்பந்தகாரரும், 2017 ஆம் ஆண்டு மார்ச் 1ஆம்  தேதி முதல் 2020 ஆம் ஆண்டு மார்ச்.1ஆம் தேதி  வரையும், 2020 – 2021 ஒரு ஒப்பந்தகாரருக்கும் ஒப்பந்தம் மாற்றி மாற்றி வழங்கப்பட்டது. இதன்  மூலம் எங்களை ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பணியில் வைத்துள்ளனர். கடந்த 2021 செப்.7 ஆம் தேதி தினக்கூலி யில் இருந்து திறன் பெறாத தொழிலாளர்கள் என மாற்றம் செய்து 429 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு அக்.10 ஆம்  தேதி முதல் 550 ரூபாயாக சம்பளம் உயர்த்தப்  பட்டது. இதில் ஐந்து நாட்கள் வரை பிடித்தம் செய்து கொள்கின்றனர். எங்களுக்கான தினக்கூலி யை ஒப்பந்த நிறுவனத்தின் மூலமாக மாநக ராட்சி வழங்கி வருகிறது. கடந்த 21 ஆண்டு களாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் தற்கா லிக தூய்மைப் பணியாளர்களாக நாங்கள் இருந்து வருகிறோம். எனவே எங்களை நிரந்தர பணியாளர் களாக பணி நியமனம் செய்ய வேண்டும். ஆட்சி யர் செயல்திறன் ஆணையின்படி தினக்கூலி யை பிடித்தம் செய்யாமல் கூலியை வழங்க வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற பணிகள்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ)  மாவட்டச் செயலாளர் தர்மராஜன் தலைமை யில் விவசாயிகள் அளித்த மனுவில்; ‘‘பாப நாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஆகிய பகுதிகளில் உள்ள  வாய்க்கால், ஆற்று தலைப்புகளில் உள்ள  ரெகுலேட்டர்கள் மற்றும் மதகுகள் பழுதடைந்  துள்ளன. எனவே, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்குள்ளாக அனைத்து பணி களையும் சீரமைக்க வேண்டும். பாபநாசம் அருகே வடசருக்கை,குடிகாடு கிராமங்களில் மண்ணியாற்றில் கான்கிரீட் சுவர் கட்டும் பணி கள் நடந்து வருகிறது. இப்பணிகள் தரமற்ற  முறையில் நடைபெறுகிறது. இதை கண்கா ணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
பட்டாவை ரத்து செய்ய வேண்டும் 
விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணை செயலாளர் ஜெய்குமார் அளித்த மனு வில்; நாஞ்சிக்கோட்டை சாலையில், புதுப்பட்டி னம் வடிகால்வாரி பகுதியில் கடந்த அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், வாரி மற்றும் வாரி புறம் போக்கு இடத்தில் பட்டா போடப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதையடுத்து, வாரிபுறம் போக்கு பகுதியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு விலையில்லா குடிமனை பட்டா கேட்டு மனு அளித்தோம். மேலும், வாரிபுறம்போக்கு பகுதியை வருவாய்த் துறை அதிகாரிகள், ரியல் எஸ்டேட் முத லாளிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு பட்டா  போட்டு வழங்கியுள்ளனர்.  இதுகுறித்து போராட்டம் நடத்திய போது பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால்  அதன்பிறகு அதிகாரிகள் கண்டு கொள்ள வில்லை. எனவே, ஏழை மக்களுக்கு பட்டா  வழங்க வேண்டும். முறைகேடாக வாரிக்கு பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும்” என குறிப்  பிடப்பட்டிருந்தது.

;